Dongle ஐ Unlock செய்வது எப்படி
Dongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.Dongle ஐ Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால்,எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்டணமாக அரவிடுவார்கள்.அதை நான் இங்கு இலவசமாக சொல்லித்தருகிறேன்.
இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடை…ய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.
இதை http://www.bb5.at/huawei.php?imei*************** அப்படியே Copy செய்து, இதில் இருக்கும் * இற்கு பதிலாக உங்களுடைய IMEI Number யை கொடுத்து Address Bar இல் Paste செய்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்
இணையத்தளங்களிலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்
இதற்கென பல மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் TubeDigger எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவொரு இணையத்தளத்திலிருந்தும் RTMP/FLV/MP4 ஆகிய வகைக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய முடியும். |
Ubuntu 12.04 தரவிறக்கம் செய்ய
கணணி இயங்குதளங்களில் இலவசமாகவும், வைரஸ் பாதுகாப்பு மிகுந்ததாகவும் காணப்படும் இயங்குதளமான Ubuntuவின் புதிய பதிப்பான 12.04 Canonical அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ் இயங்குதளத்தில் இறுதிப் பயனருக்கான பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், லினக்ஸ்ஸின் 3.2.14 kernelஐ அடிப்படையாகக் கொண்டதும் Libreoffice 3.5.2ன் shipsகளை கொண்டதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை தற்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
MP3 Cutter மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய
ஆனால் Eusing MP3 Cutter ஆனாது இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருளாகக் காணப்படுவதுடன், Portable பதிப்பாகவும் காணப்படுகின்றது. இம்மென்பொருள் கோப்பின் அளவு 647 KB ஆகும். இம்மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான MP3 கோப்புக்களிலிருந்து சிறய அளவுடைய MP3 கோப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். அதேநேரம் மிக இலகுவான பயனர் இடை முகத்தைக் கொண்டுள்ளது. இது தவிர மிகவும் துல்லியமான முறையில் கோப்பை பிரித்தெடுக்க முடியும். |
பயர்பொக்ஸ் 10 பதிப்பு வெளியீடு
| புதிய அம்சங்கள் கொண்ட பயர்பொக்ஸ் 10 பதிப்பு வெளியீடு |
இதில் 3D கிராபிக்ஸ் வசதி உள்ளது. இதற்கு முன்பு இருந்த பதிப்பு 9ல் அதிக டூல்பார் வசதி வந்தது. இதில் கூடுதலாக Java Script தொழில்நுட்பத்தினை பெற முடிந்தது. ஆனால் தற்பொழுது வெளியான இந்த பதிப்பில் கூடுதல் வசதிகள் உள்ளடங்கியுள்ளது. இந்த பதிப்பு கடந்த 27ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த பதிப்பை விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் தரவிறக்கி உபயோகப்படுத்தலாம். |
ஓவியக் கலைஞர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்
இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள பிளர் (Blur), சார்ப்னஸ்(Sharpness), பர்ன்(Burn), ஸ்மட்ஜ்(Smudge) டூல்களும் லேயர் (Layar) வசதியும் இதில் உள்ளது. எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உட்பட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்கமுடியும். |
சகல மென்பொருள்களும் இலவசமாக ஒரே இடத்தில்!
சிறந்த மென்பொருட்களை ஒரு தளம் தரப்படுத்தி தருகிறது. இங்கு அனைத்து விதமான அன்ரிவைரஸ் மென்பொருட்களையும் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம். அன்ரிவைரஸ் மாத்திரமன்றி கணினி பாதுகாப்பிற்கு முக்கியமான அனைத்து மென்பொருட்களும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம் அதுமாத்திரமன்றி அன்ரிவைரஸ் மென்பொருட்களுக்கான புதுப்பித்தல்கள், கட்டண அன்ரிவைரஸ் மென்பொருளின் பரீட்சார்த்த பதிப்பு போன்றவற்றையும் முற்றிலும் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த தளத்திற்கு செல்வதற்கு இங்கே கிளிக் பண்ணுங்கள்..
